எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்து மகிழ்ந்த என் முதல் ஆசிரியர்என்னுடைய பெரியப்பாவின் மகனான ராமண்ணா வாத்தியார் தான்.எனக்கு நான்காம் வகுப்பு ஆசிரியராக அவர் இருந்தார். அவர்செய்யுட்களை உதாரணங்களோடு விளக்கிய விதம் எனக்கு இன்னும்நினைவில் இருக்கிறது. வகுப்பில் இருக்கும் மாணவர்களைக்கொண்டேகற்பனைக்கதைகள் சொல்லி ஒவ்வொரு செய்யுளையும் மறக்கமுடியாதபடி செய்து விடுவார். 'அழகு நிலா முழுமை நிலா, முளைத்ததுவிண் மேலே; அது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தார்போலே'என்ற பாரதிதாசனின் பாடலுக்கு அவர் சொல்லிக்கொடுத்து நடனம்ஆடியதும் நினைவுக்கு வருகிறது.
ஏதோவொரு நிகழ்ச்சிக்காக ஒரு சிறிய நாடகம் போட்டோம். அதற்குசிலப்பதிகாரத்தில் இருந்து ஆய்ச்சியர் குரவை என்னும் பகுதியில் இருந்து'வடவரையை மத்தாக்கி' என்ற பாடலுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தார்.பல ஆண்டுகள் கழித்து எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய அந்தப்பாடலைநான் கேட்ட போது பழைய நினைவுகள் பொங்கிக்கொண்டு வந்தன.எங்கள் வேலூர் குக்கிராமம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரியநகரம் ஒன்றும் அல்ல. அந்த கிராமத்தின் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் முயற்சியும் இலக்கிய ஆர்வமும் என்னை பிரமிக்க வைக்கின்றன.
நான் ஏழாம்
வகுப்பு படித்த பொது சிவக்கொழுந்து வாத்தியார் எங்களுக்குத் தமிழ் செய்யுள்
வகுப்புகள் எடுத்தார். அவர் நடத்திய சத்திமுற்றப்புலவர் எழுதிய 'நாரை விடு
தூது' என் மனத்தில்
அப்படியே பசுமையாக இருக்கிறது. ஒரு ஆசிரியர் எப்படி மாணவர்களை motivate செய்ய
வேண்டும் என்று அவரிடம் கற்க வேண்டும். ஒரு சமயம் புலவர்கள் நிறைந்த ஒரு
சபையில் ஒரு விவாதம் நடந்ததாம். மிகச்சிறந்த உவமானம் எது என்று விவாதித்த போது 'நாரை விடு தூது'வில் வரும்
உவமை தான் மிகச்சிறந்தது என்று முடிவாயிற்றாம். அப்படி என்ன சிறப்பு அந்த உவமையில் என்று நாங்கள் கேட்டோம். இப்போது படிக்கப்போகிறோம்.
உங்களுக்குத் தெரிந்து விடும் ' என்றார் எங்கள் ஆசிரியர். அந்த வரிகளையும்
முதலில் கூறினார்.'பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச்
செங்கால் நாராய்! '.எங்களுக்கு முதலில் புரியவில்லை. 'பனங்கிழங்கு
சாப்பிட்டிருக்கிறீர்களா? அதை முனையில் பிளந்து பாருங்கள். நாரையின் அலகு அதை
அப்படியே ஒத்திருக்கும்' என்றார். கிராமத்து மாணவர்களான எங்களுக்கு உடனே
புரிந்தது. அந்த உவமையையும் புலவர் எப்படி மெருகேற்றியிருக்கிறார்என்பதையும் அவர் விளக்கினார். அப்போதே தமிழில்
ஒரு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.
பின்னர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு இலக்கியக்கூட்டம் நடந்தது. மணல் தரையில் நாங்கள் அமர்ந்திருக்க பேச்சாளர் தெ. ஞான சுந்தரம் 'பாரதி யார்?' என்ற தலைப்பில் பேசினார். அவர் அப்போது கண்டர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்தார். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பாரதியின் பன்முகச்சிறப்பினை உதாரணங்களுடன் அவர் விளக்கியதில் அன்றே பாரதிக்கு அடிமையானேன். சில மாதங்களுக்கு முன் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் நடந்த போது அதே பேச்சாளர் இங்கே ஒரு நிகழ்ச்சிக்குத்தலைமை தாங்கி நடத்தினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச்சென்றுபார்த்தேன். அவருடைய முதல் பேச்சைப்பற்றியும் குறிப்பிட்டேன். அவர் வேலூரில் இருந்த போது என் அப்பாவிடம் ஹிந்தி கற்றுக்கொண்டிருக்கிறார். என் தம்பி ஸ்ரீதரைப்பற்றி விசாரித்தார். மிகவும் மகிழ்சசியாக இருந்தது
அதே பள்ளியில் நான் பதினோராம் வகுப்பு படித்த் போது கண்டர் உயர்நிலைப்பள்ளியில் இருந்து சின்னு வாத்தியார் எங்களுக்கு தமிழ் இலக்கணம் நடத்தினார். 'தேமா', புளிமா' ,கருவிளம்' ,கூவிளம்' என்று அவர் அசை, சீர் முதலியவற்றை மிகத்தெளிவாக நடத்தினார். இன்னும் கூட எனக்கு நினைவிருக்கிறது.
பின்னர் அர்த்தநாரி வாத்தியார் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தார். துணைப்பாடம் தான் எடுத்தார். எளிய நடையில் சிறிய வாக்கியங்களைக் கொண்டு summary எழுதிப்போடுவார். பின்னர் எங்களை அப்படியே ஒப்பிக்கச் சொல்லுவார். இந்தக் காலத்தில் இந்த முறையை சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் சொந்தமாக வாக்கியங்கள் அமைக்க வந்தது அப்போது தான். சிறிய வாக்கியங்களைக் கொண்டு எளிய நடையில் எழுதும் திறமையும் அப்படித்தான் வந்திருக்கவேண்டும்.
கல்லூரியில் படிக்கும் பொது மறக்க முடியாத ஆசிரியை Mrs. Elizabeth Antony. அவருடைய உச்சரிப்புக்கு நான் அடிமை. ஒவ்வொரு சொல்லிற்கும் உயிர் இருக்கிறது என்றுஉணர்த்துவதைப்போலத்தான் உச்சரிப்பார். அப்பொழுதெல்லாம் ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றாவது படிக்காமல் பட்டம் வாங்க முடியாது . நான் ஆங்கில இலக்கியம் எடுத்துப்படித்ததனால் இன்னும் அதிக நாடகங்களைப்படித்தேன்.
Antony and Cleopatra என்ற நாடகம் எல்லாருக்கும் பொது. அதை Mrs. Antony நடத்துவதை
ஷேக்ஸ்பியர் கே
ட்டிருக்கவேண்டும்.
அந்நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
என் வகுப்புக்கு ஷேக்ஸ்பியர் எடுத்தவர் வேறொரு ஆசிரியை. சுமாராக எடுப்பார். ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படிப்பார். இரண்டாவது முறை படிப்பதை விளக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த வகுப்புக்கு Mrs.Antony தான்
ஷேக்ஸ்பியர் எடுத்தார். அந்த மாணாக்கியர்கள் ஒவ்வொரு நாளும் வந்து ஆஹா! ஓஹோ! என்று அன்று எடுத்த பகுதியை விவரிக்கும் போது பொறாமையாக
இருக்கும்.
இந்தப்பொறாமை உச்ச கட்டத்தை அடையும் படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அந்த நாடகத்தில் 'Enobarbaus' என்று ஒரு பாத்திரம். ஆண்டனியின் இணைபிரியாத தோழன்மற்றும் தொண்டன். ஆண்டனி மீது உயிரையே வைத்திருந்தான். கிளியோபாட்ரா இறந்து விட்டாள் என்ற பொய்யான செய்தியைக்கேள்விப்பட்டுத தன் உயிரை மாய்த்துக்கொள்ள நிச்சயிக்கிறான் ஆண்டனி. ஆனால் தன்னைத்தானே கொன்று கொள்ளும் அளவு அவனுக்குத்துணிவு வரவில்லை. ஆகவே தன் தொண்டன் Enobarbaus இடம் தன்னைக்கொன்று விடுமாறு கட்டளையிடுகிறான். தன் தலைவனை, உயிர் நண்பனை எப்படிக்கொல்வான் Enobarbaus ? 'நீங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னால் உங்களைக் கொல்ல முடியாது' என்கிறான். ஆண்டனி கண்ணை மூடிக்கொள்கிறான். 'ஆ' என்று ஒரு சத்தம். கண்ணைத்திறந்தால் தன்னைத்தானே குத்திக்கொண்டு செத்துக்கிடக்கிறான் Enobarbaus.
இந்தக்காட்சியையும், ஆண்டனியின் சோகத்தையும், அவர்களுடைய நட்பின் ஆழத்தையும் Mrs.Antony எப்படி
விவரித்திருப்பாரோ நான் அறியேன். ஹாஸ்டலில் அன்று மாலை டிபனுக்கு உருளைக்கிழங்கு
போண்டா தயாரித்திருந்தார்கள். நான் குண்டாக ஆரம்பித்ததே சாரதா கல்லூரிஹாஸ்டல்
உணவினால் தான். மிகவும் நன்றாக இருக்கும்.அதுவும் உருளைக்கிழங்கு போண்டா ரொம்பவே
ஸ்பெஷல். ஒருவருக்கு இரண்டு தான். ஆனால் இரண்டுக்கு மேல் தின்ன முடியாது; அன்று நிறைய
போண்டாக்கள் மீதமிருந்தன. வேண்டுமென்றால் இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஒரே ஆச்சரியம். எப்படி இவ்வளவு மீந்தது? என்று கேட்டால் இரண்டு மூன்று அறையிலிருந்து மாணவிகள் வரவே
இல்லை என்றார்கள். அந்த அறைகளுக்குப்போய்ப்பார்த்தால்
அறையைச்சார்த்திக்கொண்டு எல்லாரும் அழுது கொண்டிருக்கிறார்கள். ஏன் எல்லாரும்
அழுகிறீர்கள்என்று
கேட்டால்,
Enobarbaus செத்துப்போய் விட்டான்' என்று பதில் வருகிறது.
எனக்கும் அழுகை வந்தது. Enobarbaus செத்ததனால் அல்ல. என்வகுப்பில் Enobarbaus செத்து, ஆண்டனி செத்து கிளியோபாட்ராவும் செத்தாயிற்று. சிறு வருத்தம் கூட வரவில்லை. கதாநாயகனின் நண்பனின் சாவை நினைத்து நினைத்து உணவுக்குக்கூட போகாமல் அழும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும் படி பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியையிடம் பாடம் கேட்கும் பாக்கியம் எனக்குக்கிடைக்கவில்லையேஎன்று தான் அன்று அழுதேன்.
பின்னர் நானே தனியாக உட்கார்ந்து கொண்டு முழு நாடகத்தையும் படித்த போது அழுகை தன்னால் வந்தது.
எழுத்தாளன் தன் உணர்வுகளை எவ்வளவு தான் வேகத்துடன் வெளிப்படுத்தினாலும் அதை முழுமையாகப்புரிய வைப்பதில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதை அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்.
பின்னர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு இலக்கியக்கூட்டம் நடந்தது. மணல் தரையில் நாங்கள் அமர்ந்திருக்க பேச்சாளர் தெ. ஞான சுந்தரம் 'பாரதி யார்?' என்ற தலைப்பில் பேசினார். அவர் அப்போது கண்டர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்தார். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பாரதியின் பன்முகச்சிறப்பினை உதாரணங்களுடன் அவர் விளக்கியதில் அன்றே பாரதிக்கு அடிமையானேன். சில மாதங்களுக்கு முன் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் நடந்த போது அதே பேச்சாளர் இங்கே ஒரு நிகழ்ச்சிக்குத்தலைமை தாங்கி நடத்தினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரைச்சென்றுபார்த்தேன். அவருடைய முதல் பேச்சைப்பற்றியும் குறிப்பிட்டேன். அவர் வேலூரில் இருந்த போது என் அப்பாவிடம் ஹிந்தி கற்றுக்கொண்டிருக்கிறார். என் தம்பி ஸ்ரீதரைப்பற்றி விசாரித்தார். மிகவும் மகிழ்சசியாக இருந்தது
அதே பள்ளியில் நான் பதினோராம் வகுப்பு படித்த் போது கண்டர் உயர்நிலைப்பள்ளியில் இருந்து சின்னு வாத்தியார் எங்களுக்கு தமிழ் இலக்கணம் நடத்தினார். 'தேமா', புளிமா' ,கருவிளம்' ,கூவிளம்' என்று அவர் அசை, சீர் முதலியவற்றை மிகத்தெளிவாக நடத்தினார். இன்னும் கூட எனக்கு நினைவிருக்கிறது.
பின்னர் அர்த்தநாரி வாத்தியார் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தார். துணைப்பாடம் தான் எடுத்தார். எளிய நடையில் சிறிய வாக்கியங்களைக் கொண்டு summary எழுதிப்போடுவார். பின்னர் எங்களை அப்படியே ஒப்பிக்கச் சொல்லுவார். இந்தக் காலத்தில் இந்த முறையை சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் சொந்தமாக வாக்கியங்கள் அமைக்க வந்தது அப்போது தான். சிறிய வாக்கியங்களைக் கொண்டு எளிய நடையில் எழுதும் திறமையும் அப்படித்தான் வந்திருக்கவேண்டும்.
கல்லூரியில் படிக்கும் பொது மறக்க முடியாத ஆசிரியை Mrs. Elizabeth Antony. அவருடைய உச்சரிப்புக்கு நான் அடிமை. ஒவ்வொரு சொல்லிற்கும் உயிர் இருக்கிறது என்றுஉணர்த்துவதைப்போலத்தான் உச்சரிப்பார். அப்பொழுதெல்லாம் ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றாவது படிக்காமல் பட்டம் வாங்க முடியாது . நான் ஆங்கில இலக்கியம் எடுத்துப்படித்ததனால் இன்னும் அதிக நாடகங்களைப்படித்தேன்.
அந்நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
என் வகுப்புக்கு ஷேக்ஸ்பியர் எடுத்தவர் வேறொரு ஆசிரியை. சுமாராக எடுப்பார். ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படிப்பார். இரண்டாவது முறை படிப்பதை விளக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த வகுப்புக்கு Mrs.
இந்தப்பொறாமை உச்ச கட்டத்தை அடையும் படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அந்த நாடகத்தில் 'Enobarbaus' என்று ஒரு பாத்திரம். ஆண்டனியின் இணைபிரியாத தோழன்மற்றும் தொண்டன். ஆண்டனி மீது உயிரையே வைத்திருந்தான். கிளியோபாட்ரா இறந்து விட்டாள் என்ற பொய்யான செய்தியைக்கேள்விப்பட்டுத தன் உயிரை மாய்த்துக்கொள்ள நிச்சயிக்கிறான் ஆண்டனி. ஆனால் தன்னைத்தானே கொன்று கொள்ளும் அளவு அவனுக்குத்துணிவு வரவில்லை. ஆகவே தன் தொண்டன் Enobarbaus இடம் தன்னைக்கொன்று விடுமாறு கட்டளையிடுகிறான். தன் தலைவனை, உயிர் நண்பனை எப்படிக்கொல்வான் Enobarbaus ? 'நீங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னால் உங்களைக் கொல்ல முடியாது' என்கிறான். ஆண்டனி கண்ணை மூடிக்கொள்கிறான். 'ஆ' என்று ஒரு சத்தம். கண்ணைத்திறந்தால் தன்னைத்தானே குத்திக்கொண்டு செத்துக்கிடக்கிறான் Enobarbaus.
இந்தக்காட்சியையும், ஆண்டனியின் சோகத்தையும், அவர்களுடைய நட்பின் ஆழத்தையும் Mrs.