Monday, October 14, 2013

அயி கி3ரி-நந்தி3னி!

மிகவும் பிரபலமான மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரத்தின் முதல் ஸ்லோகத்துக்கே முழுமையான பொருள் பலருக்குத்தெரியாது. காதுக்கு இனிய வார்த்தைகளுடன், மயக்கும் இசையுடன், நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஸ்தோத்திரங்களில் அதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதன் பொருளை அறிந்து கொள்ளலாமா?


अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते
गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते ।
भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ॥ १ ॥

Ayi Giri-Nandini Nandita-Medini Vishva-Vinodini Nandi-Nute
Giri-Vara-Vindhya-Shiro-[A]dhi-Nivaasini Vissnnu-Vilaasini Jissnnu-Nute |
Bhagavati He Shiti-Kannttha-Kuttumbini Bhuri-Kuttumbini Bhuri-Krte
Jaya Jaya He Mahissaasura-Mardini Ramya-Kapardini Shaila-Sute || 1 ||

அயி கி3ரி-நந்தி3னி நந்தி3த-மேதி3னி விஸ்வ-வினோதி3னி நந்தி3- நுதே
கி3ரி-வர-விந்த்4ய-ஷிரோ-(அ)தி4 நிவாசினி விஷ்ணு-விலாசினி ஜிஷ்ணு நுதே|
ப4க3வதி ஹே ஷிதிகண்ட2-குடு2ம்பி3னி பூ4ரி-குடு2ம்பி3னி  பூ4ரிக்ருதே
ஜெய ஜெய ஹே மஹிஷாசுர-மர்த்தினி ரம்ய-கபர்த்தி3னி ஷைலசுதே||


Meaning:

Salutations to the daughter of the mountain, who fills the world with joy, for whom, the whole world is a divine play and who is praised by Nandi,

Who dwells on the summit of the Vindhyas, which is the best of the mountains, who gives joy to Lord Vishnu as His sister and who is praised by Indra,

O Goddess, who is the consort of Neela kanta Shiva, who has abundance of relations in the world, (being the Cosmic mother), and who created such abundance,
Victory to you, the destroyer of the Demon Mahishasura, to you, who has beauticul locks of hair and who is the daughter of the mountain.


அயி- ஏ! விளிக்கும் சொல். கிரி-மலை. நந்தினி- மகள். நந்தித- மகிழ்விக்கின்ற மேதினி- உலகை ( மேதினி என்ற சொல் இதே பொருளில் தமிழிலும் உபயோகப்பட்டுள்ளது. " மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்"- ஔவையார்) விஸ்வ- உலகை. வினோதினி-விளையாட்டாக நினைப்பவளே. நந்தி நுதே- நந்தியால் புகழப்படுபவள்.

கிரி வர- மலைகளில் சிறந்ததாகிய ( வர- என்றால் மிகச்சிறந்தது என்று பொருள். ஆகையால் தான் நாம் நம் பெண்குழந்தைகளுக்கு வரன் பார்க்கிறோம். வெறும் பையன்களைப்பார்ப்பதில்லை) விந்திய-விந்திய மலையின். சிரோ -தலைக்கு ( சிகரத்துக்கு) அதி- மேல் நிவாசினி -வசிப்பவள். விஷ்ணு விலாசினி- ஒரு சகோதரியாக விஷ்ணுவை மகிழ்விப்பவள். ஜிஷ்ணு- இந்திரனால் .நுதே-புகழப்படுபவள்.

பகவதி! - தெய்வத்தாயே! ஹே!- ஏ! ஷிதிகண்ட2 -நீல நிறக்கழுத்து உடைய ( சிவனின்). குடு2ம்பி3னி-குடும்பத்தைச்சேர்ந்தவளே. பூ4ரி- ஏராளமானவர்கள் நிறைந்த.  குடு2ம்பி3னி-குடும்பத்தைச்சேர்ந்தவளே ( உலக மாதா அல்லவா) பூ4ரி- ஏராளமானவற்றைப் படைத்தவளே!  ( பூ4ரி போ4ஜனம்- என்றால் நிறைய பக்ஷணங்களோடு நிறைய பேருக்குப்பரிமாறி அவர்களைத்திருப்திப்படுத்துவது என்று பொருள். )
ஜெய ஜெய - வெற்றி உண்டாகட்டும்! ஹே- ஏ!  மஹிஷாசுர- எருமைவடிவில் வந்த அரக்கனை மர்த்தினி-அழித்தவளே!  ரம்ய- அழகிய கபர்த்தி3னி- பின்னலிட்ட சடையுடைய ஷைல - மலையின் சுதே - மகளே!||

ஏ! மலையின் மகளே!  உலகை மகிழ்விக்கின்றவளே! உலகை விளையாட்டாக நினைப்பவளே!  நந்தியால் புகழப்படுபவளே!

மலைகளில் சிறந்ததாகிய விந்திய மலையின்சிகரத்தின் மேல் வசிப்பவளே!. சகோதரியாக விஷ்ணுவை மகிழ்விப்பவளே! இந்திரனால் புகழப்படுபவளே!

தெய்வத்தாயே! நீல நிறக்கழுத்து உடைய சிவனின் குடும்பத்தைச்சேர்ந்தவளே! ஏராளமானவர்கள் நிறைந்த குடும்பத்தைச்சேர்ந்தவளே! ஏராளமானவற்றைப் படைத்தவளே!

எருமைவடிவில் வந்த அரக்கனை அழித்தவளே! அழகிய  பின்னலிட்ட சடையையுடையவளே!  மலையின் மகளே!

உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

1 comment:

  1. நன்றி ரமா அக்கா ....இந்த ஸ்லோகத்தை நாங்கள் ஒன்பது நாளும் பாராயணம் செய்தோம் ...தினமும் உங்களை நான் நினைத்துக் கொண்டே படிப்பேன் ...அப்போதே தெரிந்தது இதற்கு உரிய விளக்கம் எனக்கு கிடைத்துவிடும் என்று ...ஆனால் இவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடும் என்று நினைக்கவில்லை ...இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றே கூறலாம் ...தொடர்ந்து இந்த நல்ல பணியை செய்து வர இறைவனை ப்ரார்திக்கிறேன் ....

    ReplyDelete