करचरण कृतं वाक्कायजं कर्मजं वा ।
श्रवणनयनजं वा मानसं वापराधं ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व ।
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥
Kara-Caranna Krtam
Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa |
Shravana-Nayana-Jam
Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa
Sarvam-Etat-Kshamasva |
Jaya Jaya
Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||
கர சரண க்ருதம் வாக்காயஜம்
கர்மஜம் வா|
ஸ்ரவண நயனஜம் வா, மானஸம்
வா அபராத(4)ம்|
விஹிதம் அவிஹிதம் வா, ஸர்வம்
ஏதத் க்ஷமஸ்வ|
ஜய ஜய கருணாப்(3)தே(4)
ஸ்ரீ மஹாதே(3)வ ஷம்போ(4)||
ஸ்ரீ மஹாதேவ சம்புவிடம்
நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கோரும் விதமாக அமைந்துள்ள இந்த ஸ்லோகம் படிக்கப்படிக்க
நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்படியெல்லாம் தவறுகள் இழைக்கக்கூடும் என்பதை ஒன்று
விடாமல் குறிப்பிட்டுள்ளது.
கர-கைகள்
சரண - கால்கள்/ பாதங்கள்
க்ருதம் -செய்தவை
வாக் - சொற்கள் ( அதனால்
தான் கலைமகளுக்கு வாகீஸ்வரி என்ற பெயர். திரு நாவுக்கரசரின் பெயர் கூட வாகீசர் என்பது
தான்- நாவுக்கரசர் என்பது வாகீசர் என்ற சொல்லின் தமிழாக்கம் தான்)
காயஜம் - உடலின் மூலமாகப்பிறந்தவை
கர்மஜம் - செய்கைகளின்
மூலமாக செய்யப்பட்டவை
வா- அல்லது
ஸ்ரவண - காதுகளால் கேட்டதால்
ஏற்பட்டவை
நயனஜம் - கண்களால் பார்த்ததால்
உண்டானவை
வா -அல்லது
மானஸம் -மனத்தில் உதித்தவை
அபராத(4)ம் - குற்றம்
விஹிதம் - செய்யப்பட்டவை
அவிஹிதம் - செய்யப்படாதவை
ஏதத் -இவை
ஸர்வம் - அனைத்தையும்
க்ஷமஸ்வ- மன்னித்தருள்வாய்
ஜய ஜய - வெற்றி உண்டாகட்டும்
கருணாப்(3)தே(4) - கருணைக்கடலே!
( 'அப்தி' என்றால் கடல். கருணாப்தி- கருணைக்கடல்.
கருணாப்(3)தே(4) என்பது
விளிவேற்றுமை. இறைவனைக் கூவி அழைத்து இப்படி மன்னிப்பு கேட்பதாக
அமைக்கப்பட்டுள்ளது)
ஸ்ரீ மஹாதே(3)வ ஷம்போ(4)-
ஸ்ரீ மஹாதேவ சம்புவே!||
கருணைக்கடலான மஹாதேவ சம்புவே!
என்னுடைய குற்றங்கள் கைகளினால் செய்யப்பட்டவையோ,
கால்களினால் செய்யப்பட்டவையோ,
சொற்களாலோ, உடலின் மூலமாகவோ, செய்கைகளின்
மூலமாகவோ செய்யப்பட்டவையோ,
அல்லது காதுகளால் கேட்டதாலோ, கண்களால் பார்த்ததாலோ
அல்லது மனத்தில் நினைத்ததாலோ
செய்யப்பட்டவையோ, செய்யப்பட்டவையோ அல்லது செய்யப்படாதவையோ, எப்படி இருந்தாலும், இவை
அனைத்தையும் மன்னித்தருள்வாய்! உனக்கு வெற்றி உண்டாகட்டும்!
'All comprehensive' என்று
ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல், எதையும் விட்டு விடாமல், செய்த குற்றத்துக்கு
மட்டும் அல்லாது செய்யாத குற்றத்துக்குக்கூட மன்னிப்பு கேட்கும் இந்த ஸ்லோகம் எனக்கு
மிகவும் பிடித்த ஒன்று!
Meaning:
1: Whatever Sins have
been Committed by Actions Performed by my Hands and Feet, Produced by my Speech
and Body, Or my Works,
2: Produced by my
Ears and Eyes, Or Sins Committed by my Mind (i.e. Thoughts),
3: While Performing
Actions which are Prescribed (i.e. duties prescribed by tradition or allotted
duties in one's station of life), As Well as All other Actions which are Not explicitly
Prescribed (i.e. actions done by self-judgement, by mere habit, without much
thinking, unknowingly etc); Please Forgive Them All,
4: Victory, Victory
to You, O Sri Mahadeva Shambho, I Surrender to You, You are an Ocean of
Compassion.
gd one thank you
ReplyDelete