நான் முன்பே தெரிவித்துள்ளது போல, என்னுடைய ஸ்ம்ஸ்க்ருத அறிவு மிகவும் குறைவு. அதனால் தான், நான் திடீர் திடீரென்று, சில வார்த்தைகளின் உட்பொருளைப்ப்புரிந்து கொள்ளும் போது அந்த ஆனந்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த விஷயங்கள் உங்களில் சிலருக்கோ, பலருக்கோ, ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.
என் அனுபவத்தில், ஸ்லோகங்களைப்புரிந்து கொள்ள ஒரளவு வார்த்தைகளும், கொஞ்சம் வேற்றுமை உருபுகள் பற்றிய அறிவும் இருந்தால் போதும். முழுமையாக அல்ல. அவற்றின் முக்கிய செய்திகளைப்புரிந்து கொள்ள.
உதாரணத்துக்கு சில வார்த்தைகள்:
1. मामव- மாமவ -என்னைக்காப்பாற்று.
माम- மாம்- என்னை
अव- அவ- காப்பாற்று.
எத்தனை பாடல்களிலும் ஸ்லோகங்களிலும் இந்த வார்த்தைகள் உபயோகப்பட்டுள்ளன!
'மாதவ மாமவ தேவா!'
'மாமவ பட்டாபி ராமா!'
'மாமவ மீனாக்ஷி'
'மாமவ ரகுவீரா..'
சில கீர்த்தனைகளில், 'அவாவா' என்று வரும். அதாவது 'அவ'+'அவ' 'காப்பாற்று'
'காப்பாற்று' என்று இரண்டு முறை சொல்லப்பட்டிருக்கும்.
2. 'मम' -மம - என்னுடைய
அந்தணர்கள் செய்யும் சடங்குகளில் இந்த வார்த்தை திரும்பத்திரும்ப வரும். சம்ஸ்க்ருதம் தெரியாமல் புரோகிதர் சொல்வதை மட்டும் திரும்பச்சொல்பவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்ல வேண்டி வரும். பித்ருக்களுக்கு செய்யும் ஸ்ரார்த்தத்திலும், தானம் கொடுக்கும் போதும், 'ந மம' 'ந மம' என்று சொல்லுங்கள்' என்று புரோகிதர் சொல்லுவார். 'ந' 'न' என்றால் இல்லை என்று பொருள். ஒரு முறைக்கு
இருமுறையாக இது என்னுடையது இல்லை. உங்களுக்குக்கொடுத்து விட்டேன்' என்று சொல்லச்சொல்லுவார்.
3. 'अस्माकम' - 'அஸ்மாகம்' -எங்களுடைய
இரண்டு மூன்று பேர் சேர்ந்து செய்யும் சடங்குகளில், இந்த வார்த்தை வரும்.
திருமணம் ஆகட்டும், ஈமச்சடங்குகள் ஆகட்டும், அவற்றில் கூறப்படும் மந்திரங்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவை, மனதை உருக்குபவை, எண்ணங்களையே மாற்றக்கூடிய சக்தி உள்ளவை என்பதை நினைத்தால், எப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை நாம் தவற விட்டு விட்டோம் என்று வருத்தமாக இருக்கிறது. இப்பவும் கூட நேரம் இருக்கிறது. அவர் அவர் இருக்கும் இடத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்கலாம். என்னால் முடிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய பகிர்வுகள் மேலும் கற்க ஒரு தூண்டு கோலாகப்பயன் பட்டால் கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ரசிக்கவைக்கும் பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteதயவு செய்து வேர்டு வெரிஃபிகேஷனை நீக்குங்கள்..
கருத்துரை வழங்க சிரமம் தருகிறது..!